Random image

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் இம்ரான் கட்சி வேட்பாளர் ஆரிப் ஆல்வி வெற்றி

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் அதிபர் தேர்தலில் இம்ரான் கான் கட்சி சார்பில் போட்டியிட்ட ஆரிப் ஆல்வி பெற்றி பெற்றுள்ளார்.

பாகிஸ்தான் அதிபர் மம்னூன் உசேனின் பதவிக்காலம் வரும் 9-ம் தேதியுடன் முடிகிறது. இதையடுத்து அடுத்த அதிபரை தேர்வு செய்ய இன்று தேர்தல் நடைபெறறது.

இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியின் வேட்பாளராக பல் மருத்துவரான டாக்டர் ஆரிப் ஆல்வி போட்டியிட்டார். பாகிஸ்தான் மக்கள் கட்சியை சேர்ந்த ஐட்ஜாஸ் அஹ்ஸன் மற்றும் ஜாமியத் உலமா இ இஸ்லாம் கட்சித்தலைவர் மவுலானா பஸ்லுர் ரெஹ்மான் ஆகிய இருவரும் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்டனர்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளை சேர்ந்த 430 உறுப்பினர்கள், மாகாணங்களின் சட்டசபை உறுப்பினர்கள் இன்று நடந்த தேர்தலில் வாக்களித்தனர். மொத்தம் 430 வாக்குகள் பதிவானது. இதில் ஆரிப் ஆல்வி 212 வாக்குகளை பெற்று பெற்றி பெற்றார். மவுலானா பசுலுர் ரெஹ்மான் 131 வாக்குகளையும், ஐட்ஜாஸ் அஹ்ஸன் 81 வாக்குகளையும் பெற்றனர்.

பலுசிஸ்தான் மாகாண சட்டசபை உறுப்பினர்கள் 60 பேரில் 45 பேர் ஆல்விக்கு ஆதரவாக வாக்களித்தனர். சிந்து மாகாண சட்டசபை உறுப்பினர்களில் 56 பேர் ஆல்விக்கு ஆதரவாகவும், 100 பேர் ஐட்ஜாஸ் அஹ்ஸனுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். கைபர் பகதுங்கவா மாகாண சட்டசபை உறுப்பினர்களில் 78 பேர் ஆல்விக்கு ஆதரவாகவும், 26 பேர் ஐட்ஜாஸ் அஹ்ஸனுக்கு ஆதரவாகவும் வாக்களித்தனர். பாகிஸ்தானின் 13-வது அதிபராக ஆசிப் ஆல்வி விரைவில் பதவி ஏற்கவுள்ளார்.