புதுடெல்லி:

கடந்த 2018-ம் ஆண்டு 207   இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.


தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த விவரம்:

கடந்த 2010-ம் ஆண்டு வரை 290 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். 2018-ம் ஆண்டு மட்டும் 207 பேர் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர்.

2012 முதல் 2015 வரை இந்திய குடியுரிமையை யாரும் துறக்கவில்லை.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மக்கள் செல்வதற்கு பொருளாதார சூழலே காரணம்.
வேலை வாய்ப்பு மற்றும் கல்விக்காக இடம் பெயர்கின்றனர். வெளிநாடுகளுக்கு இந்திய மக்கள் செல்வதற்கான காரணம் சமீபத்தில்தான் ஆவணப்படுத்தப்பட்டது.

கடந்த 2018-ம் ஆண்டு குடியுரிமை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. குடியுரிமை துறப்பு விண்ணப்பங்களைப் பெற்று முடிவு எடுக்க சம்பந்தப்பட்ட நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டது.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.