2019 தேர்தல்: அமேதியில் ராகுல் மீண்டும் போட்டி…ரேபரேலியில் சோனியா சந்தேகம்

டில்லி:

நாடாளுமன்ற தேர்தல் 2019ம் ஆண்டு நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன.

பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் தேர்தல் கூட்டணிக்கான காய் நகர்த்தி வருகிறது. கம்யூனிஸ்ட் மற்றும் சில மாநிலங்களில் உள்ள முக்கிய கட்சிகள் பலமான கூட்டணி அமைத்து காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. இரண்டுமே ஆட்சிக்கு வரும் வாய்ப்பை தவிர்க்க திட்டமிட்டுள்ளன.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநிலத்துக்குட்பட்ட அமேதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வரும் தேர்தலிலும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ளார் என்று கட்சி மேலிட தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தி மீண்டும் போட்டியிடுவாரா? அல்லது, அவரது மகள் பிரியங்கா வதேரா போட்டியிடுவாரா? என்ற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 2019 தேர்தல்: அமேதியில் ராகுல் மீண்டும் போட்டி...ரேபரேலியில் சோனியா சந்தேகம், in 2019 loksabha election rahul again contesting in his amethi constituency but sonia was doubt in contesting at Raebareli
-=-