இத்தாலியில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரோனா பாதிப்பு – 345 பேர் மரணம்

ரோம்

த்தாலி நாட்டில் 24 மணி நேரத்தில் 3526 பேருக்கு கொரொனா பாதிப்பு ஏற்பட்டு மொத்தம் 31506 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

உலகெங்கும் அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்பால் சீனாவுக்கு அடுத்தபடியாக  இத்தாலி நாட்டில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  கொரோனவில் பாதிக்கப்பட்டவர்களில் 76% பேர் சீனா, இத்தாலி, ஈரான், ஸ்பெயின் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளில் உள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்துக்குள் இத்தாலியில் 3526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதன் மூலம் இத்தாலியில் மட்டும் இதுவரை 31506 பேர் கொரோனா தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றனர்.  இதைப் போல் கடந்த 24 மணி நேரத்தில்  கொரோனாவால் இத்தாலியில் 345 பேர் மரணம் அடைந்து மொத்தம் 2503 பேர் உயிர் இழந்துள்ளனர்.

கொரோனாவால் மரணம் அடைந்தவர்கள் நாடுவாரியான விகிதங்கள் பின்வருமாறு:

இத்தாலி  – 7.9%

ஈரான்     – 6.11%

ஸ்பெயின்  – 4.47%

சீனா       –  3.98%

பிரான்ஸ்  – 2.23%

அமெரிக்கா – 1.69%

தென் கொரியா – 0.97%