கழிவுநீர் தொட்டி விஷவாயு தாக்கி 3 ஆண்டில் 228 பேர் பலி

டில்லி

டந்த  3 ஆண்டுகளில் கழிவு நீர்த் தொட்டி விஷவாயு தாக்கி 288 பேர் உயிர் இழந்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடெங்கும் கழிவு நீர்த் தொட்டிகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் அவலநிலை இன்னும் தொடர்ந்து வருகிறது.    இது சுகாதார மற்றும் சமுதாயக் கேடு என்பதுடன் இவ்வாறு சுத்தம் செய்வோர் விஷவாயு தாக்கி மரணம் அடைவதும் தொடர்கிறது.  இதனால் பல குடும்பங்கள் வாழ்வாதாரம் பாழாகிறது.

இவ்வாறு விஷவாயு தாக்கி கழிவு நீர்த் தொட்டிகளில் மரணம் அடைந்த ஊழியர்கள் எண்ணிக்கை குறித்து மாநிலங்களவையில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் எழுத்துப் பூர்வமான கேள்வி ஒன்றை எழுப்பினார்.  இந்த கேள்விக்கு சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது.

அந்த பதிலில், “தற்போது கழிவு நீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்யும் பணியில் 51,835 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.  இவர்களில் உத்தரப் பிரதேசத்தில் அதிகம் பேர் உள்ளனர்.  இங்கு மொத்தம் 24,932 பேர் உள்ளனர்.  தமிழகத்தில் இந்தப் பணியில் மொத்தம் 62 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர்,

மத்திய அரசிடம் கழிவு நீர்த் தொட்டிகளில் உயிர் இழந்த ஊழியர்கள் விபரம் கிடையது.  ஆயினும் மாநில அரசுகள் அளித்துள்ள தகவலின்படி கடந்த 3 ஆண்டுகளி நாடு முழுவதும் 288 பேர் கழிவு நீர்த் தொட்டி விஷ வாயு தாக்கி உயிர் இழந்துள்ளனர்.” என தெரிவிக்கபட்டுள்ளது.