டில்லி

ப்போதைய நடைமுறைக்கு உதவாது என கண்டறியப்பட்டுள்ள சுமார் 1200 சட்டங்களை மோடி அரசு நீக்கியுள்ளது.  இன்னும் 1824 சட்டங்கள் திருத்தங்களுக்கு காத்திருக்கின்றன

பிரதமர் மோடி தனது தேர்தல் உரையில் ஒவ்வொரு புதுச்சட்டம் இயற்றப்படும் போதும் தற்போது நடைமுறைக்கு ஒவ்வாத சட்டங்கள் நீக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.   அது போல இதுவரை மோடி அரசு சுமார் 1200 சட்டங்களை நீக்கியுள்ளது.

இது குறித்து சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

“தற்போதய மோடி தலைமையிலான அரசுக்கு முன்பு கடந்த 65 ஆண்டுகளில் எளிமையான நடைமுறைக்கும், நாட்டின் பொருளாதார முன்னேற்றத்துக்கும் தடையாக இருந்த சுமார் 1301 சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளது என்றும், ஆனால் தற்போதைய அரசு தன் பதவியேற்ற மூன்று வருடங்களில் தேவையற்ற 1200 சட்டங்களை நீக்கியுள்ளது. இது தவிர 1159 சட்டங்கள் திருத்தப்பட்டு அவைகளுக்கு இரு அவைகளிலும் ஒப்புதல் வாங்கப் பட்டுள்ளது.

இது போல தற்போதைய காலத்துக்கு சரி வராத 1824 சட்டங்கள் திருத்தங்களுக்கு காத்திருக்கின்றன” என்று சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது