Random image

இந்தியாவில் அடுத்த 7-8 வருடங்களில் 1000 விமானங்கள் அதிகரிக்கும் : அரசு அதிகாரி

டில்லி

டுத்த 7-8 வருடங்களில் இந்தியா மேலும் 1000 விமானங்கள் வாங்கப்பட உள்ளதாக இந்திய அரசின் விமான போக்குவரத்து துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் விமானப் பயணம் என்பது அதிகமாக இல்லாத நிலை இருந்தது. சமீப காலமாக அந்த நிலை மாறி வருகிறது. பலரும் விமானப் பயணத்தை முன்பை விட அதிகமாக தேர்வு செய்கின்றனர். கடந்த 50 வாரங்களில் இந்தியாவில் உள்நாட்டு பயணிகளில் எண்ணிக்கை 20% அதிகரித்துள்ளது என ஒரு கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

நேற்று செய்தியாளர்களை சந்தித்த விமான போக்குவரத்து செயலர் சௌபே, “இந்தியாவில் விமானப் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவது வரவேற்கத் தக்கது. தற்போது உலகில் உள்ள பல விமான சேவை நிறுவனங்களும் இந்தியாவில் விமான சேவைகளை தொடங்க வாய்ப்பு அளிக்க அரசு தயாராக உள்ளது.

தற்போது சுமார் 600 விமானங்கள் இந்தியாவில் பறக்கிறது. வரும் 7-8 ஆண்டுகளுக்குள் இந்தியாவில் மேலும் 1000 விமானங்கள் வரை கொள்முதல் செய்யப்பட உள்ளது. இந்திய அரசு அதை ஒட்டி இன்னும் 100 விமான நிலையங்களை அமைக்க உள்ளது. இன்னும் 15 வருடங்களில் இந்திய விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1000 கோடியை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எரிபொருளின் விலையை பொறுத்து இந்த விமானப் பயணிகளின் எண்ணிக்கை வரும் 20 வருடங்களுக்கு தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ளது. இந்த வளர்ச்சிக்கு தேவையான உள்கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளை அளிக்க இந்திய அரசு தயாராக உள்ளது.” என தெரிவித்துள்ளார்.