டில்லி

கடந்த 7 ஆண்டுகளில் வேலை இன்மை கடுமையாக அதிகரித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடெங்கும் வேலை இன்மை கடுமையாக அதிகரித்து வருகிறது.

குறிப்பாக வாகன உற்பத்தி தொழிற்சாலைகளில் இந்த வேலை இன்மை உள்ளதாகக் கூறப்பட்டது.

தற்போதைய தகவல்களின் படி அனைத்துத் துறைகளிலும் வேலை இன்மை அதிகரித்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுனில் குமார் பதில் அளித்தார்.

அந்த பதிலில் க்டந்த 7 ஆண்டுகளில் வேலை இன்மை 5.3% உயர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-12 ஆம் வருடம் வேலை இன்மை 2.3% ஆக இருந்த நிலையில் 2017-18 ஆம் வருடம் 7.6% ஆக அதிகரித்துள்ளது.

இது தேசிய சராசரியை விட அதிகமாகும்.