ஆயுத ஏற்றுமதியாளர்களின் முதல் பட்டியலை வெளியிட்டது இந்தியா

புதிய டெல்லி:

லகளாவிய ஆயுத ஏற்றுமதியாளர் பட்டியலில் இந்தியா 23-ஆவது இடத்தை பிடித்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் ஆயுத விற்பனையை ஊக்குவிப்பதில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதால், வரவிருக்கும் ஆண்டுகளில் இந்த தரவரிசை உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணமையில் வெளியான ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய ஆயுத பரிமாற்றம் குறித்த தகவலில், 2015-ஆம் ஆண்டு முதல் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 32 % குறைந்துள்ளதை காட்டுகிறது. இது மேக் இன் இந்தியா முயற்சி முன்னேறி வருவதை தெளிவாக காட்டுகிறது. ஆனாலும், பெரியளவிலான ஆயுதங்களை வைத்துள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில், அதாவது, சவுதி அரேபியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறக்குமதியில் பெரிய சரிவை சந்தித்துள்ளது. இந்த தகவல்களின் படி, இந்தியா, ரஷ்யா உடன் 56 % ஆயுத விற்பனை செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கு ஆயுதம் வழங்கும் நாடுகள் பட்டியலில், முதல் மூன்று இடங்களை ரஷ்யா முதலிடத்திலும், இஸ்ரேல் மற்றும் பிரான்ஸ் நாடுகள் அடுத்தடுத்த இடங்களையும் பிடித்துள்ளது. இதன் மூலம், இந்த பட்டியலில், முதல் மூன்று இடங்களில் அமெரிக்கா இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து அப்பாச்சி மற்றும் சினூக் ரக ஹெலிகாப்டர்களையும், அமெரிகாவிடம் இருந்து பி8ஐ கடல் விமானங்களையும் ஆர்டர் செய்துள்ளது. அப்பாச்சி மற்றும் எம்.எச் 60 ரோமியோ ஹெலிகாப்டர்களை அண்மையில் 3 பில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் கணக்கில் எடுத்து கொள்ளப்படவில்லை.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவு ஒரு மூலோபாய கூட்டாளராக வளர்ந்ததால், அமெரிக்கா 2010-14 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கு இரண்டாவது பெரிய ஆயுத விற்பனையாளராக இருந்து வருகிறது . இருப்பினும், 2015–19 ஆம் ஆண்டில் இந்தியா அதன் சப்ளையர் பல்வகைப்படுத்தல் கொள்கையுடன் தொடர்ந்தது, மேலும் அமெரிக்காவிலிருந்து ஆயுத இறக்குமதி 2010–14 ஐ விட 51% குறைவாக இருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கான சில்வர் லைனிங், இறக்குமதியில் 32% சரிவுடன் ஏற்றுமதியாளர்கள் பட்டியலில் நுழைந்துள்ளது. தற்போது, ​​காட்டப்பட்டுள்ள ஏற்றுமதிகள் சுமாரானவையாக இருப்பதுடன், அவை உலக ஆயுத சந்தையில் 0.2% மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக மியான்மர் இருந்து வருகிறது. இந்தியாவிலிருந்து மியான்மருக்கு 46% ஏற்றுமதியும், இலங்கை 25% மற்றும் மொரீஷியஸ் 14% ஏற்றுமதி செய்து வருகிறது.

உலகளாவிய வணிக உச்சி மாநாட்டில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா தனது பாதுகாப்பு ஏற்றுமதியை 5 ஆண்டுகளுக்குள் 5 பில்லியன் டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் நட்பு வெளிநாடுகளுக்கான கூடுதல் கடன் மற்றும் மானியங்களை அரசாங்கம் விரிவுபடுத்தும் என்று என்று தெரிவித்தார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், பாகிஸ்தான் தனது ஆயுத அமைப்புகளுக்கு சீனாவை முழுமையாக நம்பியிருக்கவில்லை என்பதையும் இந்த தகவல்களில் தெளிவாக தெரிய வந்துள்ளது . கடந்த 2015-ஆம் ஆண்டு முதல், பாகிஸ்தானின் ஆயுத இறக்குமதியில் 73% சீனாவுக்கு உள்ளது.