புனே:

முதன் முதலாக ஆன்லைனில் ஸ்கைப் மூலம் புனே தம்பதியர் விவாகரத்து பெற்றுள்ளனர்.

அம்ராவதியை சேர்ந்த 26 வயது பெண்ணும், நாக்பூரைச் சேர்ந்த 28 வயது ஆணும் கடந்த 2015ம் ஆண்டு மே 9ம தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். இதன் பின் இருவருக்கும் வெவ்வேறு இடங்களில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. இதில் கணவர் சிங்கப்பூரில் வந்த பணி வாய்ப்பை ஏற்றார்.

கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த அந்த பெண்ணுக்கு தனது வேலைக்கு திருமணம் தடையாக இருப்பதா எண்ணினார். இதனால் கணவன் மனைவிக்கு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி முதல் பிரிந்து வாழ்ந்தனர்.

ஒரு ஆண்டு கழிந்து இருவரும் விவாகரத்து கோரி கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பரஸ்பர ஒப்புதல் அடிப்படையில் புனே சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதன் பின்னர் மனைவியும் லண்டனுக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

எனினும் பணி காரணமாக மனைவியால் நீதிமன்ற வாய்தாக்களில் ஆஜராக முடியாத நிலை இருந்து வ ந்தது. இந்நிலையில் கடந்த சனிகிழமை நீதிமன்ற வாய்தாவில் ஆஜராக கணவர் சிங்கப்பூரில் இருந்து புனே வந்தார். மனைவிக்கு பணி இருந்ததால் வரமுடியவில்லை.

இதனால் வீடியோ கான்பரசிங் மூலம் விசாரணை நடத்த வக்கீல் சுசித் முண்டாடா கோரிக்கை விடுத்தார். இதை நீதிமன்றம் ஏற்று ஆதாரங்கள் ஆன்லைனில் ஸ்கைப் மூலம் தாக்கல் செய்ய அனுமதி வழங்கியது. இதை ஏற்ற நீதிமன்றம் இருவருக்கும் விவாகரத்து வழங்கி தீர்ப்பளித்தது.