சிறு, குறு தொழிலுக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கடனுதவி…. நிர்மலா சீத்தாராமன்

டெல்லி:

ரூ.20 லட்சம் கோடி பொருளாதார மேம்பாட்டு திட்டங்கள் என்னென்ன என்பது குறித்து மத்திய நிதி அமைச்சர்  நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களிடம் விவரித்து வருகிறார்.

அப்போது,  சிறு, குறு தொழிலுக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கடனுதவி வழங்கப்படும் என்றவர் அதற்காக ரூ.20 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாகவும் கூறினார்.

சுயசார்பு பாரதம் என்ற பெயரில் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று கூறியவர்,

உள்ளூர் நிறுவனங்களை உலகளவிலான நிறுவனங்களாக மாற்றுவதே மோடி அரசின் முக்கிய நோக்கம் என்று கூறியவர்,  சிறு, குறு தொழில் துறைக்கு இன்று 6 சலுகை அறிவிப்பு அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி,

சிறு, குறு தொழிலுக்கு ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான கடனுதவி. இந்த திட்டம் அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி வரை வழங்கப்படும்.  வட்டி செலுத்த ஒரு ஆண்டு கால அவகாசம் வழங்கப்படும் கடனை 4 ஆண்டுகளில் திருப்பி அளிக்கலாம்.

பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்டுள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் 2 லட்சம் சிறு, குறு நிறுவனங்கள் பயன்பெறும்.

வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி நிதி ஒதிக்கீடு. புதிய கடன் வசதியை பெற சொத்து பத்திரங்கள் போன்ற பிணை எதையும் தரத் தேவையில்லை.

குறுந்தொழில்களுக்கான முதலீடு வரம்பு 25 லட்சம் ரூபாயில் இருந்து 1 லட்சம் கோடியாக உயர்வு.

நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வரம்பு 10 கோடியிலிருந்து 20 கோடியாக அதிகரிப்பு.

சிறு தொழில்களுக்கு முதலீட்டு  வரம்பு 5 கோடியிலிருந்து 10 கோடியாக அதிகரிப்பு.

வாராக்கடன் பட்டியலில் உள்ள சிறுதொழில் நிறுவனங்களுக்கு ரூ.50,000 கோடி கடன்

ரூ.100 கோடி வரை வியாபாரம் உள்ள சிறு, குறு தொழில் உள்ள நிறுவனங்களுக்கு ரூ.25 கோடி கடன் இருந்தால் அவர்களுக்கு கூடுதல் கடன் வழங்கப்படும்.

சிறு தொழில் நிறுவனங்களுக்கு சேரவேண்டிய அனைத்து தொகைகளும் 45 நாட்களில் வழங்கப்படும்

200 கோடி ரூபாய் அளவிலான கொள்முதல் டெண்டர்களுக்கு இனி அந்நிய நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது. அவை இந்திய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.

இவ்வாறு கூறினார்.