டெல்லி:
ல்வேறு தரப்பினரும் கலந்து ஆலோசித்து இந்த ரூ.20 லட்சம் கோடி பொருளாதார வளர்ச்சி தொகுப்பு உருவாக்கப்பட்டுள்ளது / பிரதமர் அறிவித்த திட்டம் ‘சுயசார்பு பாரதம்’ என்ற பெயரில் செயல்படுத்தப்படும் தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார் நிதியமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி,  கடன் பெறும் சிறு குறு நிறுவனங்கள் முதல் 1 ஆண்டுக்கு கடனை திருப்பி செலுத்த தேவையில்லை
RERA-வின் கீழ் பதிவு செய்த ரியல் எஸ்டேட் நிறுவனங்கள், கட்டுமானத்தை முடிக்க வேண்டியதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக கூறினார்.

அரசு பணியை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டட பணிகளை முடிக்க ஆறு மாதம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
பொது முடக்கத்தால் முடிக்க இயலாத கட்டிட பணிகளை முடிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ரயில்வே, சாலை உள்ளிட்ட ஒப்பந்ததாரர்களின் வங்கி உத்தரவாதம் ஆறு மாதங்கள் நீட்டிப்பு என  நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
தனிநபர் விண்ணப்பங்கள் இல்லாமல் 2020 மார்ச் 25 அல்லது அதற்குப் பிறகு காலாவதியாகும் அனைத்து பதிவு செய்யப்பட்ட திட்டங்களுக்கும் பதிவு மற்றும் நிறைவு தேதி சூ-மோட்டோவை 6 மீட்டர் நீட்டிக்க மாநிலங்கள் / யூ.டி.க்கள் மற்றும் அவற்றின் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு  அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கட்டுமான திட்டங்களின் பதிவுக்காலம் 6 மாதங்கள் நீட்டிப்பு. புதிதாக பதிவு செய்யும் திட்டங்களுக்கும் பதிவுக்கால நீட்டிப்பு பொருந்தும்.
சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு வங்கி உத்தரவாத தொகையை அரசு நிறுவனங்கள் விடுவிக்கலாம். அரசு ஒப்பந்ததாரர்களுக்கு பணிகளை முடிக்க 6 மாத காலம் கூடுதல் அவகாசம்
இவ்வாறு அவர் கூறினார்.