டில்லி:

ஆதார் இணைப்புக்கு எதிரான வழக்குகளில் உச்சநீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கவுள்ளது.

நலத்திட்ட உதவிகள், சலுகைகள் போன்றவற்றை பெற ஆதாரை கட்டாயம் இணைக்க வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின் போது ஆதார் இணைக்க மத்திய அரசு வரும் மார்ச் 31-ம் தேதி வரை அவகாசம் வழங்குவதாக தெரிவித்தது. செல்போன் இணைப்புகளுடன் ஆதார் இணைப்பதற்கான காலக்கெடு நீட்டிப்பு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இந்நிலையில் ஆதார் இணைப்பு கட்டாயமா? அல்லது அதற்கு தடை விதிக்கப்படுமா என்பது குறித்த இடைக்கால தீர்ப்பை உச்சநீதிமன்றம் நாளை (15-ம் தேதி) அறிவிக்கிறது. மேலும், ஆதார்ருக்கு எதிரொன வழக்குகளை ஜனவரி 17ம் தேதி முதல் அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உள்ளது.