Random image

ஆப்கன்: தலிபான் தாக்குதலில் 9 ராணுவ வீரர்கள் பலி

காபுல்:

ஆப்கானிஸ்தான் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் கிளர்ச்சியாளர்கள் கொடூர தாக்குதல் நடத்தினர் இதில் பாதுகாப்பு படை வீரர்கள் 9 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 6 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

தகவலறிந்த மீட்புப் படையினர் விரைந்து வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாகாண ஆளுநரின் செய்தி தொடர்பாளர் கெலானி பர்ஹத் இந்த தாக்குதல் சம்பவத்தை உறுதிபடுத்தியுள்ளார்.

மேலும், இந்த தாக்குதலில் 10க்கு மேற்பட்ட கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் 5 பேர் படுகாயம் அடைந்ததனர் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் தலிபான் இயக்கத்தினர் அடங்கிய குழுவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.