ஏர்செல் மேக்சிஸ் வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய நவ.26 வரை தடை நீட்டிப்பு

டில்லி:

ர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகனான கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்ட தடையை  நவம்பர் மாதம் 26ந்தேதி வரை நீட்டித்து டில்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு விசாரணையின்போது, ப.சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணை வரும்  26ம் தேதிக்கு ஒத்திவைத்தது. அன்றைய தினம்  ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் இருவரது முன் ஜாமீன் மனு விசாரிக்கப்படும் என்று  ஒத்திவைத்தது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம்.

கடந்த 2006ம் ஆண்டு ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்தபோது,  மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனம், ஏர்செல் நிறுவனத்தில் ரூ.3 ஆயிரத்து 500 கோடி முதலீடு செய்தது. இந்த விவகாரத்தில் முறைகேடு நடைபெற்றதாக சர்ச்சை எழுந்தது.   சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் நடத்தி வரும் நிறுவனம் இதில்  ஆதாயம் அடைந்ததாக குற்றம் சாட்டப்பட்டது.

இதன் அடிப்படையில் அமலாக்க துறையும், சி.பி.ஐ.யும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கில் இருவர் மீதான விசாரணை நடைபெற்று குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தாங்கள் கைது செய்யப்படலாம் என, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு டில்லி பாட்டியாலா  சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணையின்போது  ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்ய தடை விதித்தது. ஏற்கனவே நடைபெற்ற விசாரணையின் வாயிலாக பல முறை அவர்கள் கைது செய்ய விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்பட்டு வரும் நிலையில், இன்றைய விசாரணையின்போதும், ப.சிதம்பரத்தின் கோரிக்கையை ஏற்று வழக்கின் விசாரணையை நவம்பர் 26ந்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: In Aircel-Maxis Case, Relief From Arrest Extended to Nov.26 For P Chidambaram, Son Kartthi Chidambaram, ஏர்செல்- மேக்சிஸ் வழக்கு!! அமலாக்க துறை மேல்முறையீடு, கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யலாம்! உச்சநீதி மன்றம் அதிரடி
-=-