சென்னை:

ம்மா இரு சக்கர வாகனம் வழங்கும் துவக்க விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஆளுநர் பன்வாரிலாலுக்கு மட்டும் கூடுதல் மரியாதை அளித்துப் பேசியதாகவும், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோருக்கு மரியாதை அளிக்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

இன்று சென்னையில், “அம்மா” இரு சக்கர வாகனம் வழங்கும் விழா நடந்தது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய மோடி, “ஸ்ரீ பன்வாரிலால் புரோகித் ஜி” என்று அழைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஸ்ரீ ஏ.கே.பழனிசாமி, தம்பிதுரை, பொன்.ராதாகிருஷ்ணன், ஓ.,பன்னீர்செல்வம், ஸ்பீக்கர் தனபால், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி” என்று வெகு இயல்பாக பெயரை மட்டும் கூறினார்.

கூட்டத்துக்கு வந்திருந்த செய்தியாளர்கள் சிலர் இது குறித்து, “ ஆளுநருக்கு மட்டும் ஜி என்ற அடைமொழி அதாவது அவர்களே என்று விளித்த பிரதமர், நமது முதல்வர், மக்களவை துணை சபாநாயகர், துணை முதல்வர் என்று யாருக்கும் அவர்களே என்ற பொருள்படும்படியான ஜி என்பதை சேர்க்கவில்லை. இது எதார்த்தமாக நடந்ததா? அல்லது பிரதமர் இவர்கள் மேல் வைத்திருக்கும் மதிப்பு அவ்வளவுதானா” என்று கேட்டனர்.