ஆந்திரா: வாகன சோதனையில் 5.7 கிலோ கடத்தல் தங்கம் சிக்கியது

ஐதராபாத்:

ஆந்திரா நெல்லூர் மாவட்டம் கசமூர் தர்கா அருகே வெங்கடாசலம் சுங்கச் சாவடியில் வருவாய்துறை அதிகாரிகள் போலீசாருடன் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அதில் 5.7 கிலோ எடை கொண்ட 58 தங்க பிஸ்கட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அது கடத்தல் தங்கம் என்பது தெரியவந்தது.

இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். வெளிநாட்டு முத்திரையுள்ள இந்த தங்க பிஸ்கட்களின் மதிப்பு ரூ. 1.82 கோடியாகும்.