ஆந்திரா: விஷவாயு தாக்கி 6 தொழிலாளர்கள் பலி

ஐதராபாத்:

ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே தாடிபத்திரியில் தனியார் இரும்பு ஆலை உள்ளது. இந்த ஆலையில் இன்று திடீரென விஷவாயு கசிவு ஏற்பட்டது.

இதில் 6 தொழிலாளர்கள் பலியாயினர். விஷவாயு கசிவால் மயங்கிய மேலும் 5 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.