பிரிட்டனில் 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3 ஆம் டோஸ் கொரோனா தடுப்பூசி

ண்டன்

ரும் இலையுதிர் காலத்தில் பிரிட்டனில் உள்ள 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனில் தற்போது உருமாறிய கொரோனா பரவல் அதிக அளவில் உள்ளது.  இந்த பரவலைத் தடுக்க பிரிட்டன் அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.  இவற்றில் கொரோனா தடுப்பூசி போடுவதும் ஒன்றாகும்.    பிரிட்டனில் மொத்தமுள்ள 6.7 கோடி மக்கள் தொகையில் 3.46 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

ஏற்கனவே இங்கு  பிஃபிசர்/பாயிண்டெக், மாடர்னா, ஆக்ஸ்ஃபோர்ட்/ஆஸ்டிரா ஜெனிகா நிறுவன தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.   தற்போது உருமாறிய கொரோனா பாதிப்பைத் தடுக்க மூன்றாம் டோஸ் கொரொனா ஊசி போடப் பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

வரும் கிறிஸ்துமஸ்க்கு முன்பு இந்த உருமாறிய கொரோனா பரவலை ஒழிக்க அரசு திட்டமிட்டுள்ளது.  எனவே வரும் இலையுதிர்காலத்தில் முதல் கட்டமாக 50 வயதை தாண்டியோருக்கு மூன்றாம் டோஸ் தடுப்பூசி போட அரசு திட்டமிட்டுள்ளதாகப் பிரிட்டன் செய்தி ஊடகமான தி டைம்ஸ் நீயூஸ்பேப்பர் தெரிவித்துள்ளது.

இதற்காக மேலும் 6 கோடி பிஃபிஸர்/பயோண்டெக் நிறுவன தடுப்பூசிகள் வாங்க அரசு திட்டமிட்டுள்ளது.   இதைத் தவிர இந்த உருமாறிய கொரோனா வைரசுக்கான சிறப்புத் தடுப்பூசியைக் கண்டறியும் பணியும் நடைபெற்று வருகிறது.   இதைத்தவிர 10 கோடி டோஸ்கள் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசி வாங்கவும் ஆர்டர் அளிக்கப்பட்டுள்ளது.