மோசடி ஆண்டில் பிஎன்பி வாடிக்கையாளர்களிடம் ரூ.151 கோடி அபராதம் வசூல்

டில்லி:

குறைந்தபட்ச தொகை இருப்பு வைக்காத காரணத்தால் தனது வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.151.66 கோடியை பஞ்சாப் நேஷனல் வங்கி அபராதமாக வசூலித்துள்ளது.

2017-18ம் நிதியாண்டில் மொத்தம் ஒரு கோடியே 22 லட்சத்து 98 ஆயிரத்து 748 வாடிக்கையாளர்களிடம் இந்த வசூல் வேட்டை நடத்தப்பட்டுள்ளது. முதல் காலாண்டில் ரூ.30 கோடியும், 2வது காலாண்டில் ரூ.290 கோடியும், 3வது காலாண்டில் ரூ.370 கோடியும், 4வது காலாண்டில் ரூ.530 கோடியும் வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த வசூல் வேட்டை நடத்திய நிதியாண்டில் தான் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் ரூ.13,700 கோடி ரூபாய் கடன் மோசடி நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் எஸ்பிஐ ரூ.1,771 கோடியை அபராதமாக வாடிக்கையாளர்களிடம் இருந்த வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.