கழிப்பிடம் இல்லாவிட்டால் மனைவியை விற்றுவிடுங்கள்!! நீதிபதி சர்ச்சை பேச்சு

டில்லி:

உங்கள் மனைவிக்கு கழிப்பறை கட்டி கொடுக்க முடியாவிட்டால் அவளை விற்றுவிடுங்கள் அல்லது ஏலம் விட்டு விடுங்கள் என அவுரங்காபாத் நீதிபதி கன்வால் தனூஷ் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.

பீகாரில் உள்ள அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள ஜம்ஹோர் கிராமத்தில் சுகாதாரம் குறித்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாவட்ட நீதிபதி கன்வால் தனூஷ் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘கழிப்பறை கட்டுவதற்கு ரூ 12 ஆயிரம் இருந்தால் போதும். கழிப்பறை இல்லாததால் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். மனைவியின் கவுரவத்தை விட ரூ.12 ஆயிரம் ரூபாய் அதிகமா.

12 ஆயிரம் ரூபாய்க்காக உங்கள் மனைவி பாலியல் பலாத்காரம் செய்ய அனுமதிக்க போகிறீர்களா. நீங்கள் கழிவறை கட்ட முடியாவிட்டால் உங்கள் மனைவியை விற்றுவிடுங்கள் அல்லது ஏலம் விட்டுவிடுங்கள்’’ என்றார்.