பிஸ்கோத்’’ படத்தில் மன்னர் வேடத்தில் சந்தானம்.. 

--

பிஸ்கோத்’’ படத்தில் மன்னர் வேடத்தில் சந்தானம்..

பிஸ்கெட் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் ஊழியராக சந்தானம் நடிக்கும் படம் ‘’பிஸ்கோத்’’.

இந்தப்படத்தில் ‘’ராஜசிம்மா’ என்ற மன்னர் வேடத்திலும் சந்தானம் நடித்துள்ளார்.

படத்தின் இயக்குநர் கண்ணன் இது குறித்துத் தெரிவித்த தகவல்கள்:

‘’பிஸ்கோத்’ படத்தில் 18 ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்தது போன்ற  ஒரு சம்பவமும் இடம் பெறுகிறது. படத்தில் 30 நிமிடங்கள் இடம் பெறும் இந்த பகுதியில் தென்னாட்டை 18 ஆம் நூற்றாண்டில் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ‘ராஜசிம்மா’ என்ற மன்னன் வேடத்தில் சந்தானம் நடித்துள்ளார்.

இது ஒரு கற்பனை கதாபாத்திரம் என்றாலும் ஒரு மாதத்துக்கும் மேலாக, அந்த நூற்றாண்டில் நடந்த சம்பவங்களை நாங்கள் ஆராய்ச்சி செய்து, அந்தக்கால சூழலைப் படத்தில் அப்படியே அச்சு அசலாகப் பிரதிபலித்துள்ளோம்.

இந்த வரலாற்றுக் காட்சிகளில் சவுகார்ஜானகி, ’மொட்டை’ ராஜேந்திரன், ஆனந்தராஜ், ’லொல்லுசபா’ மனோகர் ஆகியோருடன் ஆயிரம் துணை நடிகர்களும் நடித்துள்ளனர்’’ என்கிறார், டைரக்டர் கண்ணன்.

-பா.பாரதி