பிரக்சிட் விவகாரம்….அமைச்சர்களை தொடர்ந்து 2 பிரிட்டன் எம்.பி.க்கள் ராஜினாமா

லண்டன்:

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகுவதற்கான பிரெக்சிட் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

இதற்காக பிரிட்டன் பல விஷயங்களை எளிதாக விட்டுக்கொடுக்கிறது என பிரெக்சிட் செயலாளர் டேவிட் டேவிஸ் குறை கூறியருந்தார். இந்நிலையில் இவரும், வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜான்சன் ஆகியோரும் பதவியை ராஜினாமா செய்திருந்தனர்.

இவர்களை தொடர்ந்து கட்சியின் துணைத்தலைவர் பதவியில் உள்ள 2 எம்.பிக்கள் இன்று தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பென் பிராட்லே மற்றும் மரியா கால்ஃபீல்டு ஆகிய 2 எம்.பி.க்களின் ராஜினாமாவுக்கும் பிரெக்சிட் விவகாரம் தான் காரணம். இத்தகைய சூழ்நிலையில் பிரெக்சிட் விவகாரத்துக்கு திட்டமிட்டபடி தீர்வு ஏற்படுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

You may have missed