Random image

சென்னை விமானநிலையத்தில் புதிய டெர்மினல் கட்டுமான பணி விரைவில் தொடக்கம்

சென்னை:

சென்னை விமானநிலையத்தை 2ம் கட்டமாக நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புதிய ஒருங்கிணைந்த டெர்மினல் ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கும் எனத் தெரிகிறது.

இந்த டெர்மினல் கட்டுமான பணியை எல் அண்டு டி நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த ஒட்டுமொத்த திட்டமும் 2021ம் ஆண்டில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய டெர்மினல் தமிழகத்தின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. சமீபத்தில் மூடப்பட்ட கமாராஜ் உள்நாட்டு முணையம் உள்ள பகுதியில் கட்டுமான பணிகள் விரைவில் தொடங்கும். அண்ணா சர்வதேச முணையமும் இடிக்கப்படுகிறது.

புதிதாக கட்டப்படும் டெர்மினல் சர்வதேச டெர்மினலாக செயல்படும். தற்போது இயங்கி வரும் சர்வதேச மற்றும் உள்நாட்டு முணையங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்நாட்டு முணையமாக செயல்படும். இதற்காக ரூ.2 ஆயிரத்து 500 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது என்று விமானநிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.