விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் இல்லையா?: தவறான தகவல்

சென்னை விமானநிலைய அறிவிப்பு பலகையில் தமிழில் அறிவிப்புகள் நீக்கப்பட்டதாக தகவல் பரவியது. இது குறித்த செய்திகள் தொலைக்காட்சி, இணைய இதழ்களில் வெளியானது. சமூகவலைதளங்களிலும் இது குறித்த தகவல்கள் பரவின.

ஆனால், விமான நிலைய அறிவிப்பு பலகையில் தமிழ் நீக்கப்படவில்லை. அறிவிப்பு பலகையில் தமிழில் அறிவிப்புகள் உள்ளதை இப்படத்தில் காணலாம் அதே நேரம், ஒலிபெருக்கி அறிவிப்பில் தமிழில் அறிவிப்பதில்லை என்பது தெரியவந்தது.

இதற்கு விமான நிலைய அதிகாரிகள், “காலையிலும் மாலையிலும் அதிக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடு இருப்பதால் நேரமின்மையால் தமிழ் – இந்தி இரு அறிவிப்புகளையும் தவிர்த்திருக்கிறோம். ஆங்கிலத்தில் மட்டும் அறிவிக்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர்.