இரு சக்கர வாகனத்தில்  சென்றால் மருந்து  கிடையாது.. 

இரு சக்கர வாகனத்தில்  சென்றால் மருந்து  கிடையாது..

சென்னையில் முழு ஊரடங்கைக் கடுமையாக்கத் தினந்தோறும் புதிய ஆணைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

இதற்கு முந்தைய ஊரடங்கின் போது,’’ முகக்கவசம் அணியாதோருக்கு மருந்து கொடுக்கக்கூடாது’’ எனச் சென்னையில் உள்ள மருந்தகங்களுக்கு போலீசார் உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இப்போது ‘’ பைக் உள்ளிட்ட இரு சக்கர வாகனத்தில் மருந்து மற்றும் மாத்திரை வாங்க வரும்  எவருக்கும் அவற்றை வழங்கக் கூடாது’’ எனச் சென்னை மாநகரில் உள்ள அனைத்து மருந்தகங்களும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த உத்தரவு சம்மந்தப்பட்ட காவல்நிலைய காவலர்கள் மூலம், அவர்கள் எல்லைக்கு உள்பட்ட மருந்தகங்களுக்கு வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘’மருந்து வாங்குவதாகச் சொல்லிக்கொண்டு, இரு சக்கர வாகனங்களில் ஊர் சுற்றும் இளைஞர்களை வீட்டுக்குள் முடக்கிப்போடவே இது போன்று வாய்மொழி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது’’ என்று போலீசார் தெரிவித்தனர். –

-பா.பாரதி