சென்னையில் இயல்பை விட வெப்பம் மேலும் அதிகரிக்குமாம்! வானிலை ஆய்வு மையம் அதிர்ச்சி தகவல்

சென்னை:

சென்னை மற்றும் அதனையொட்டி உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர்  மாவட்டங்களில் தற்போதைய வெப்பத்தை விட பல மடங்கு வெப்பநிலை அதிகரிக்கும் வானிலை ஆய்வு மையம் எச்சிரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே கடுமையான வெயில்  மக்களை வாட்டி வதைத்து வருகிறது.வெயிலின் கொடுமையில் சிக்கி  மக்கள் அல்லல் பட்டு வரும் நிலையில், தண்ணீர் பஞ்சமும் தலைவிரித்தாடுகிறது.

இடையில் கத்திரி வெயிலின் காரணமாக கடுமையான வெப்பம் நிலவிய நிலையில், அதன்பிறகா வது வெப்பம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெப்பம் மேலும் மேலும் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் பருவமழை தொடங்கியிருப்பதால், மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் பகுதிகளில் உள்ள மாவட்டங்களில் சற்று வெப்பம் குறைந்துள்ள நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், சேலம் போன்ற மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது.

இந்த நிலையில் இன்று  சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில்: அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.