சென்னையில் இன்று 1023 பேர், மொத்த பாதிப்பு 1,04,027 ஆக உயர்வு

மிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மேலும், 5063 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்து உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 1023 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால்,  பாதிக்கப்பட்ட வர்கள் மொத்த  எண்ணிக்கை  1,04,027 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மட்டுமே 1,143 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பி உள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை   89,969  ஆக அதிகரித்து உள்ளது.

தற்போதைய நிலையில், 11,856  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 23 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதனால் கொரோனா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தோர் எண்ணிக்கை   2,202 ஆக உயர்ந்துள்ளது.

கார்ட்டூன் கேலரி