Random image

சத்தீஸ்கர்: நக்சல் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் பலி

ராய்ப்பூர்:

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஓடுக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சமீபத்தில் போலீசார் நடத்திய என்கவுண்டரில் நக்சலைட்டுகள் பலர் கொல்லப்பட்டனர். மேலும், அவர்களிடம் இருந்து துப்பாக்கி உள்ளிட்ட வெடி பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

 

இந்நிலையில், இன்று சத்தீஸ்கர் கன்கர் பகுதியில் நவீன ரக வெடிகுண்டு மூலம் நக்சலைட்டுகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நக்சலட்கள் பதுங்கியுள்ள இடத்தை அடையாளம் காணும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.