சட்டீஸ்கர்: ராஜினாமா செய்த ராய்ப்பூர் கலெக்டர் பாஜக.வில் இணைந்தார்

டில்லி:

சட்டீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் மாவட்ட கலெக்டராக பணியாற்றியவர் ஓ.பி.சவுத்ரி. ஐஏஎஸ் அதிகாரியான இவர் கடந்த 25-ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் ஆட்சி மீண்டும் அமைவதற்கு தீவிரமாக பிரசாரம் செய்வதற்காகவே தனது கலெக்டர் பதவியை இவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் இன்று பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா முன்னிலையில் சவுத்ரி பா.ஜ.க.வில் இணைந்தார். அப்போது சட்டீஸ்கர் முதல்வர் ரமன் சிங் உடனிருந்தார்.

இதேபோல், உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவரும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக தேர்தலில் பிரசாரம் செய்வதற்காக தன்னை பணியில் இருந்து விடுவிக்குமாறு முதல்வர் யோகி ஆதித்யாநாத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.