பெய்ஜிங்:

சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியில் கூண்டில் இருந்து தப்பிய புலி பார்வையாளர்கள் பகுதியில் புகுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சீனாவின் ஷான்க்?ஷி மாகாணத்தில் லின்பென் என்ற இடத்தில் சர்க்கஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சி க்கு நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் வந்திருந்தனர். சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிக்காக புலி உள்ளிட்ட சில விலங்குகள் கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த இருந்த புலி ஒன்று திடீரென வெளியேறி பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்தது.

இதனால், பார்வையாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டது. கூட்டத்தினர் தலைதெறிக்க அங்கும் இங்கும் ஓடினர். அப்போது ஏற்பட்ட நெரிசலில் 2 குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சேர் க்கப்பட்டனர். பின்னர் சர்க்கஸ் ஊழியர்கள் புலியை கட்டுக்குள் கொண்டு வந்து மீண்டும் கூண்டில் அடைத்தனர். புலி பார்வையாளர்கள் கூட்டத்திற்குள் புகுந்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இது குறித்து விசாரணை நடந்து வருவதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். சீனாவில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தான், கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த புலியிடம் பணத்தாளை இளைஞர் ஒருவர் வீசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென இளைஞரின் கைவிரலை புலி கவ்வியது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.