Random image

டில்லி: மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை

டில்லி:

டில்லியில் மெட்ரோ ரெயில் முன் பாய்ந்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

டில்லி சத்தர்பூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் வழக்கம் போல் இன்று மாலை பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. 4 மணியளவில் அங்கு ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது நடைமேடையில் நின்றிருந்த 40 வயது பெண் திடீரென ரெயில் முன் பாய்ந்தார்.

இதில் அவர் ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவலறிந்த ரெயில்வே போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த பெண் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனால் சத்தர்பூர் நிலையம் மார்கத்தில் மெட்ரோ ரெயில் சேவைகள் பாதித்தது.