டில்லியில் தமிழக விவசாயிகள் மீது தடியடி! கைது

டில்லி,

லைநகர் டில்லியில் தமிழக விவசாயிகள் கடந்த 25 நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரைநிர்வாண நிலையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் நடத்தி வரும் வேளையில் இன்று  விவசாயிகள் கையை அறுத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மோடி போன்ற முகமுடி அணிந்த விவசாயி காலில் ரத்தத்தை ஊற்றி போராட்ட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கு கடன் தள்ளுபடி செய்யக்கூடாது என்று நேற்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியிருந்தார்.

அதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் 3.30 மணி அளவில் ஜந்தர் மந்திரில் போராடி வரும் விவசாயிகள் அங்கிருந்த அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த ரிசர்வ் வங்கியை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தினர்.

இதன் காரணமாக போராடிய விவசாயிகள் மீது லேசான தடியடி நடத்தி கைது செய்து அழைத்து சென்றனர்.

இந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்  ஜந்தர் மந்திர் கொண்டுவரப்பட்டு விடுக்கப்பட்டனர்.