Random image

டில்லி: தாய், மகள் பாலியல் பலாத்காரம்….சாமியார் மற்றும் அவரது மகன் மீது வழக்கு

டில்லி:

தாயையும், அவரது மைனர் மகளையும் பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் பிரபல சாமியார் அஷூபாய் குருஜி மற்றும் அவரது மகன் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

டில்லி ஹால்காஸ் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அனைவராலும் ஆஷூபாய் என்று அழைக்கப்படும் இந்த சாமியார் பிரபல ஜோதிடரும் ஆவார்.

2008ம் ஆண்டு தனது சிகிச்சைக்காக வந்த பெண்ணையும், அவரது மைனர் மகளையும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. சாமியார் மட்டுமின்றி அவரது மகனும், மகனின் நண்பர்களும் சேர்ந்து இருவரையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

சாமியார்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுக்கள் கடந்த சில ஆண்டுகளாகவே எழுந்து வருகிறது. டில்லி பாதேப்பூரில் இந்த ஆண்டு தொடக்கத்தில் தாதி மகராஜ் என்ற சாமியார் மீது பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்டது.

இவர் மீதும், இவரது 3 சகோதரர்கள், ஒரு பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்ஸாமில் சுமா பாபாஎன்பவர் கைது செய்யப்பட்டார்.