தெலுங்கானா முதல்வர் மகனின் சொத்து மதிப்பு 4ஆண்டுகளில் 400% உயர்வு

டில்லி:

தெலுங்கானா மாநில முதல்வர் தெலுங்கானா ராஷ்டிரிய சமீதி கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் இருந்து வருகிறார்.அவரது மகன் ராமாராவ். இவர் மாநில அமைச்சராக உள்ளார். இவரது சொத்து மதிப்பு கடந்த 4 ஆண்டுகளில் 400 சதவிகிதம்  உயர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் வரும் டிசம்பர் 7ம் தேதி  மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சிர்சில்லா தொகுதியில் போட்டியிட தெலுங்கானா மந்திரி கே.டி.ராமா ராவ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

கே.டி.ஆர். என்று பிரபலமாக அறியப்பட்ட கே.டி.ராமா ராவ், தெலுங்கானா முதல்வர் சந்திர சேகர்ராவின் மகனும் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமாவார்.

கடந்த நான்கு ஆண்டுகளில், கே.டி.ராமா ராவ்வின் சொத்து மதிப்பு 400%-ஆகஉயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.

கடந்த  2014ம் ஆண்டு 29 லட்சம் ரூபாயாக இருந்த கே.டி.ராமா ராவின் வருடாந்திர வருமானம் 2018ம் ஆண்டு 74 லட்ச ரூபாயாக உயர்ந்துள்ளது.

அவரது மனைவி ஷைமிலா கல்வகுந்தலாவின் வருமானம் 2014 ஆம் ஆண்டில் 21 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆனால், இப்போது 20 மடங்காக அதிகரித்து 4 கோடியாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கே.டி.ஆர். தாக்கல் செய்த மனுவில் தனக்கு 4.93 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது மனைவிக்கு 36.68 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் இருப்பதாகவும், அவரது மகள் கே. அலேகியவுக்கு 19.50 லட்சம் வாங்கி இருப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

தொழில் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் நகராட்சி நிர்வாகம் போன்ற முக்கிய துறைமுகங்களை கே.டி.ஆர். தன் வசம் வைத்துள்ளார். ஆனால், தனது தந்தை கே.சி.ஆர். போலவே தானும் ஒரு விவசாயி என்றே அவர் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கே.டி.ஆரின் மொத்த வருமானம் வருடத்திற்கு ரூ. 14.57 லட்சம் என்றும் விவசாய வருமானம் வருடத்திற்கு ரூ. 59.85 லட்சம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது மனைவியின் வருமானம் ரூ. 3.55 கோடி மற்றும் அவரது விவசாய வருவாய் ரூ. 24.65 லட்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இவர்களுக்கு மேடக், ரங்கா ரெட்டி, ஹைதராபாத் மற்றும் கரீம்நகர் மாவட்டங்களில் 10 கோடி ரூபாய்க்கும் மேலான நிலங்கள் சொந்தமாக உள்ளது.

தன்னிடம் ஒரே ஒரு கார் மட்டுமே இருப்பதாக கே.டி.ஆர். குறிப்பிட்டுள்ளார். அவரது தந்தை கே.சி.ஆர். தாக்கல் செய்த மனுவில் அவரது சொத்து மதிப்பு 22 கோடி ரூபாய் என்றும் தன்னிடம் ஒரு கார் கூட இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது சுவாரசியமாக பார்க்கப்படுகிறது.

மேலும், கே.டி.ஆர். தனக்கு 33.28 கோடி ரூபாய் கடன் பொறுப்புகள் இருப்பதாகவும், அவரது மனைவிக்கு 27.39 கோடி ரூபாய் கடன் பொறுப்புகள் இருப்பதாகவும் அவர் சமர்ப்பித்த ஆவணத்தில் குறிப்பிட்டுள்ளார்.

You may have missed