பாரிஸ்:

பிரான்ஸ் நாட்டில் 15வயது வரை அனைவரும் பள்ளிக்கு செல்வது கட்டாயம் என்று  பிரான்ஸ்  நாடு புதிய நடைமுறையை அதிரடியாக அறிவித்து உள்ளது. இந்த புதிய நடைமுறை இன்றுமுதல் அமலுக்கு வந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவின் கொரத்தாண்டவம் காரணமாக பள்ளி, கல்லூரிகளும் முடங்கி மாணாக்கர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது.

பிரான்ஸ் நாட்டில் கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 60ஆயிரத்து 376 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை நோய்தொற்றில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 74ஆயிரத்து 372 பேர். தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 56ஆயிரத்து 365, இவர்களில் 715 பேர் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுஉள்ளது. இதுவரை  454 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று முதல் பள்ளிகளை திறக்க உத்தரவிட்டு உள்ளது. ஏற்கனவே பல வாரங்களுக்கு முன்பே பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால், அவைகள் அனைத்தும் தன்னார்வ அடிப்படையில் மட்டுமே திறக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், புதிய உத்தரவு ஒன்றும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.  அதன்படி, இன்று (திங்கள்கிழமை)  முதல் 15 வயது வரை அனைவருக்கும் பள்ளிக்குச் செல்வது கட்டாயமாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.