பிரான்ஸ்: சிறையில் இருந்து ஹெலிகாப்டரில் தப்பிய கொள்ளையன்

பாரிஸ்:

பிரான்ஸில் 2010-ம் ஆண்டு நடந்த ஒரு கொள்ளை சம்பவத்தில் ரெடோயின் ஃபெய்ட் (வயது 46) என்பவருக்கு கடந்த ஏப்ரலில் 25 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பாரிஸ் நகரின் புறநகர் ரியூ பகுதி சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஃபெயிட் 3 கைதிகள் துணையுடன் சிறையில் இருந்து தப்பிச் சென்றான். ஆயுதங்களுடன் வந்த மர்ம கும்பல் அவனை ஹெலிகாப்டரில் ஏற்றி தப்பிச் சென்றது

ரெடோயின் ஃபெய்ட்-ஐ கைது செய்ய பாரிஸ் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே 2013-ம் ஆண்டில் சிறை சுவரை வெடிகுண்டு வைத்து தகர்த்து தப்பிச்சென்றான் என்பது குறிப்பிடத்தக்கது.