பாரிஸ்

பிரான்சில் நேற்று தொடங்கப்பட்ட உலகின் மிகப் பெரிய ஐந்தாண்டு அணுசக்தி இணைவு மின் திட்டம் வரும் 2025 இல் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகெங்கும் தற்போது பசுமை மயமாக்கல் அதிக அளவில் பேசப்படுவதால் மாற்று எரிசக்தியாக அணுசக்தி திட்டம் உருவாகி வருகிறது.   உலகில் அணுசக்தி மின் திட்டத்துக்கு எதிர்ப்பு உள்ளதைப் போல் வரவேற்பும் அதிக அளவில் உள்ளது.  அணுசக்தி மின் திட்டத்தில்  அதிக அளவில் புவி வெப்பம் அதிகரிக்கும் என அச்சம் உள்ளது.  அத்துடன் அணுக்கழிவுகளால் சுற்றுச் சூழல் அதிக அளவில் பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் எழுந்துள்ளது.

உலகின் மிகப் பெரிய அணுசக்தி இணைவு மின் திட்டம் ஒன்றை உருவாக்க பிரான்ஸ் திட்டமிட்டுள்ளது.  இதில் வழக்க்மான அணு உலைகலன் போலப் புவி வெப்பம் அதிகரிக்க வாய்ப்பிருக்காது.   அது மட்டுமின்றி இந்த புதிய உலைகலனில் அணு உருகுதல் நடக்காது என்பதால் மிகவும் குறைவான அணுக்கழிவுகளே உருவாகும்.   இதர் திட்டம் எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அணு உலையில் தானே சூடாகும் பிளாஸ்மா பயன்படுத்தப்படுகிறது.

இவை முந்தைய உலைகலன்களைக் காட்டிலும் 10 மடங்கு அதிக வெப்பத்தை அளித்தாலும் புவி வெப்ப மயமாக்கல் முழுவதுமாக இருக்காது எனக் கூறப்படுகிறது.   அதே வேளையில் இந்த உலைக்லன் இயங்கும் போது வழக்கமான அணு மின் சக்தியைப் போல் 10 மடங்கு உருவாகும்.  இந்த உளைகலனின் 30 மீட்டர் விட்டம்கொண்ட கிரியோஸ்டாட் இந்தியாவில் உருவாக்கப்படுகிறது.  இது இந்த உலைகலனை மிக மிகக் குறைந்த வெப்ப நிலையில் வைத்திருக்கிறது.

இந்த அணுசக்தி திட்டத்தில் பல பன்னாட்டுத்  தனியார் நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. நேற்று இந்த அணு  உலைகலன் அமைக்கும் திட்டத்தை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மாக்ரான் தொடங்கி வைத்துள்ளார்.  ஐந்தாண்டு திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ள இத்திட்டம் தனது உற்பத்தியை வரும் 2025ல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்துக்கு ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.