பாரிஸ்

பிரெஞ்ச் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரை இறுதிச் சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ரஷ்யாவின் டாமினிக் தையீமால் தோற்கடிக்கப்பட்டார்.

 

தற்போது பிரஞ்சு நாட்டில் பிரஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் தொடர்ந்து செர்பியா நாட்டின் வீரர் நோவக் ஜோகோவிச் அபாரமாக விளையாடி வந்தார். அரை இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய ஜோகோவிச் உடன் ரஷ்யா நாட்டின் வீரர் டாமினிக் தையீம் நேற்று முன் தினம் மோதினார்.

இந்த போட்டியில் 5 செட்களில் தையீம் 6-2, 3-6, 3-1 என முன்னிலையில் இருந்தார். அந்த நேரத்தில் கனமழை பெய்தது. தொடர்ந்து பெய்த மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டு நேற்று மீண்டும் போட்டி தொடர்ந்தது.

நேற்றைய ஆட்டத்தின் போது தொடரப்பட்ட மூன்றாவது செட்டில் தையீம் மீண்டும் 7-5 என முன்னிலைக்கு வந்தார். அதை தொடர்ந்து நான்காவது செட்டை ஜோகோவிச் 7-5 என கைப்பற்றினார். இதை ஒட்டி ரசிகர்கள் ஐந்தாவது செட்டை மிகவும் சுவாரசியமாக கவனித்து வந்தனர்.

ஐந்தாவது செட்டை தையீம் 7-5 என கைப்பற்றி ஜோகோவிச்சை வீழ்த்தினார். இரு தினங்களாள போராடியும் ஜோகோவிச் வெற்றி பெறாத நிலையில் தையீம் வெற்றி பெற்று இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார். அவர் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளில் இரண்டாம் முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

ரஷ்ய நாட்டு வீரர் டாமினிக் தையீம் மற்றும் ஸ்பெயின் நாட்டு வீரர் ரபேல் நாடல் ஆகியோர் இறுதிச் சுற்றில் போட்டியிட உள்ளனர்