புயலால் பாதிப்படைந்த மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு

கஜா புயலால பாதிகப்பட்டுள்ள மாவட்டங்களில் மதுக்கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாகை, தஞ்சை, திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடப்பட்டன.

win

தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் நேற்று முன்தினம் நாகை அருகே கரையை கடந்தது. இதனால் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மரங்கள், மின்கம்பங்கள், வீடுகள் என அனைத்தும் சேதமடைந்த நிலையில் நிவாரணப்பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

புயலினால் பாதிக்கப்பட்டவர்களை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவ உதவிகளை அரசு வழங்கி வருகிறது. புயலினால் உயிரிழதவர்களின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், புயலால பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் மதுக்கடைகளை மூடும்படி தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளத். இது தொடர்பாக தமிழநாடு நுகர்பொருள் வாணிப கழக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கஜா புயலால கடுமையாக பாதிப்படைந்த தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படும் மதுக்கடைகளை மூட வேண்டும். அரசின் மறு உத்தரவு வரும் வரை மதுக்கடைகளை திறக்கக் கூடாது “ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.