குட்கா ஊழல் வழக்கில் 2 அதிகாரிகள் ஜாமின் மனு தள்ளுபடி

--

சென்னை:

குட்கா ஊழல் வழக்கில் 2 அதிகாரிகள் ஜாமின் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசியல் களத்தில் குட்கா ஊழல் சூடிபிடித்துள்ளது. அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என பலருக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கு மிகவும் தீவிரமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்த வழக்கில் மாதவராவ் உள்ளிட்ட 5 பேர் கடந்த 7-ம் தேதி சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். அதில் உணவு பாதுகாப்புத்துறை மற்றும் கலால் வரி கண்காணிப்புத்துறை அதிகாரிகளான செந்தில் முருகன், நவநீதகிருஷ்ண பாண்டியன் ஆகிய 2 பேரும் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த சிபிஐ நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்து மனுவை இன்று தள்ளுபடி செய்தது. மேலும் இந்த வழக்கில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரி சிவக்குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.