Random image

குஜராத்: 182 மிட்டர் உயர வல்லபாய் படேல் சிலை அக்., 31ல் திறப்பு

காந்திநகர்:

குஜராத்தில் வரும் அக்டோபர் 31ம் தேதி 182 மீட்டர் உயரம் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் சிலையை பிரதமர் மோடி திறந்துவைக்கிறார்.

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு குஜராத் நர்மதா மாவட்டத்தில் 182 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்க அப்போதைய முதல்வராக இருந்த மோடி முடிவு செய்தார். உலகிலேயே மிகப்பெரிதாக இந்த சிலையை உருவாக்க 2013-ம் ஆண்டில் தீர்மானிக்கப்பட்டது.

ரூ. 2,603 கோடி செலவில் இந்தச் சிலைக்கு அடிக்கல் நாட்டுவிழா மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த சிலையை அமைப்பதற்காக இந்தியாவின் பல பகுதிகளில் இருந்து மண், இரும்பு உள்ளிட்ட பொருட்கள் சேகரிக்கப்பட்டன.

ஒருமைப்பாட்டுச் சிலை என பெயரிடப்பட்டுள்ள வல்லபாய் பட்டேலின் இந்தச் சிலையை அமைக்கும் பணிகள் சுமார் 5 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள நடந்து வருகிறது. வரும் அக்டோபர் 31-ம் தேதி இந்த சிலையை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என்று குஜராத் முதல்வர் விஜய் ருபானி தெரிவித்துள்ளார்.