காந்திநகர்:

குஜராத் மாநில சட்டமன்ற தேர்தல் 2 கட்டமாக நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று (9ம் தேதி) மற்றும் 2ம் கட்ட வாக்குப்பதிவு 14ம் தேதி நடக்கிறது.

இந்த வகையில் முதல் கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு மொத்தம் 89 தொகுதிகளுக்கு நடக்கிறது. இதில் மொத்தம் 977 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2.12 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

இத்தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடக்கும் 89 தொகுதிகளிளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 5வது முறையாக குஜராத் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைக்க பாஜக கடுமையாக போராடி வருகிறது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பிரதமர் மோடி இங்கு அதிக நாட்கள் முகாமிட்டு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். அதேபோல் பாஜக.விடம் இருந்து ஆட்சியை கைப்பற்றி காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்ந்த ராகுல்காந்தியும் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொண்டார்.

ஒட்டுமொத்த இந்தியாவும் எதிர்பார்க்க கூடிய தேர்தலாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத் என்பதால் இந்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

குறிப்பாக குஜராத் மாநிலத்தை ரோல் மாடலாக கொண்டு தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால் இந்த மாநிலத்தை தக்க வைக்க பாஜக கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.2ம் கட்ட வாக்குப்பதிவு 14ம் தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை 18ம் தேதி நடக்கிறது.