அகமதாபாத்:

கடந்த 2 ஆண்டுகளாக குஜராத் பட்டிதார் தலைவர் ஹர்திக் படேல் அரசியல் பயணம் குறித்து வாய் திறக்காமல் இருந்து வருகிறார். பட்டிதார் இனத்துக்கு இடஒதுக்கீட்டிற்காக மட்டும் அவர் குரல் கொடுத்து வருகிறார். ஆனால், இந்த நிலை விரைவில் மாறும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட்டில் பட்டிதார் மற்றும்  படேல் அமைப்பு சார்பில் குஜராத்தில் ஆளுங் கட்சியான பாஜவுக்கு எதிராக நடத்தப்பட்ட பேரணியில் வன்முறை வெடித்தது. இதனால் குறிப்பிட்ட வாக்கு வங்கி உள்ள இந்த அமைப்பினர் எதிர்வரும் நவம்பரில்

நடக்கும் குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜ.வை ஆட்சியில் இருந்து இறக்க முடிவு செய்துள்ளது. இந்த அமைப்பின் பல பேரணிகளில் பாஜ எதிர்ப்பு கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகிறது. அதோடு இவர்கள் காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகளுக்கு ஆதரவாகவும் பிரச்சாரங்கள் மேற்கொள்ளவில்லை.

அதிகாரப்பூர்வ பிரச்சாரங்கள், பேரணிகள், நேர்காணலில் கூட எந்த கட்சிக்கு ஆதரவு என்பதை ஹர்திக் படேல் மற்றும் சமீதி தலைவர்கள் இதுவரை தெரிவிக்கவில்லை. பாஜவுக்கு பிரதான எதிர்கட்சியாக காங்கிரஸ் உள்ளபோதும் அவர்கள் இந்த நிலையை கடைபிடித்து வருகின்றனர்.

௨௦௧௫ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கு பின் நடந்த உள்ளாட்சி தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதை பட்டிதார் இனத்தை சேர்ந்த குறைந்த வருவாய் உள்ள மற்றும் கிராமப்புற பிரிவினர் அறிந்து வைத்துள்ளனர். அதே சமயம் மாநில

அளவிலான தேர்தல் நடைமுறைகளில் பட்டிதார் அனாமத் அந்தோலன் சமதி ஈடுபடும் வகையில் அரசியலில் நுழைய வேண்டும். பா.ஜ., காங்கிரஸ் கட்சிகளுக்கு எதிராக 3வது அணியை அமைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஆனால் ஹர்தீக் படேல் மூன்றாவது அணி அமைப்பது அல்லது அரசியலில் நேரடியாக ஈடுபடுவதை மறுத்து வருகிறார்.

சட்டமன்ற தேர்தலுக்கு 3 மாதங்களே உள்ள நிலையில் சமிதி தலைவர்கள் காங்கிரஸ் கட்சியுடன் நட்புறவு வளர்ச்சியடைந்துள்ளது. காங்கிரஸ் ஆதரவு நிலைப்பாடு வெளிப்படையாக வளர்ந்து வருகிறது.  சமிதி தலைவர்கள் தாங்கள் காங்கிரஸ் ஆதரவாளர்கள் என பொது இடங்களிலப் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அவர்களது உறவை வலுப்படுத்தும் வகையில் பல கூட்டங்கள் நடந்து வருகிறது. காங்கிரஸ் கட்சியில் பட்டிதார் தலைவர்களை முன்நிறுத்தி வருகிறது. மிக மூத்த நிர்வாகிகளாகவும் இவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதனால் காங்கிரஸ் கட்சிக்கு சமிதி தலைவர்கள் வெளிப்படையாகவே ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

கடந்த மாதம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட பட்டிதார் வாலிபர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் இறந்தார். போலீசார் தாக்கியதால் வாலிபர் இறந்த சம்பவம் பட்டிதார் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதற்காக நடந்த கண்டன கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் பட்டிதார் சமதி தலைவர்களுடன் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்று பல நிகழ்வுகளில் இரு தலைவர்களும் இணைந்து பணியாற்றி வருகின்றனர். உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள வாக்கு வங்கி அடிப்படையில் சட்டமன்ற தேர்தலில் பட்டிதார் சமூக ஆதரவும் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றியை தேடி தரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.