திம்பு:

ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை செய்வதையும் ஆபரேஷன் செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார் பூடான் பிரதமர் லோட்டாய் டிஷெரிங்.


கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தேர்தலில் பூடானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் டிஷெரிங்.
பிரதமர் பதவி வகித்த போதும் தன் டாக்டர் தொழிலை அவர் விடவில்லை.

சனிக்கிழமைதோறும் கோட்டை மாட்டிக் கொண்டு அரசு மருத்துமனையில் ஆஜராகிவிடுகிறார் பிரதமர் டிஷெரிங்.

அவர் அங்கும் இங்கு ஓடி நோயாளிகளை கவனிக்கும் போது, அங்கிருக்கும் நர்ஸ்கள் மற்றும் சக மருத்துவமனை ஊழியர்கள் பிரதமர் இருக்கிறார் என்ற நினைப்பு இன்றி தங்கள் பணிகளை பார்க்கின்றனர்.

பொருளாதார வளர்ச்சியை விட, அந்த மக்களை அரசு மகிழ்விப்பது அதிகரித்துள்ளது,
சுற்றுச் சூழலைப் பாதுகாப்பது தேசிய அளவிலான மகிழ்ச்சியாக பார்க்கிறார்கள்.

இமயமலை அடிவாரத்தில் உள்ள இந்த நாட்டில் 60% காடுகளால் சூழப்பட்டுள்ளன.

பெரிய சுற்றுத்தலமாகவும் திகழ்கிறது. சீசனில் வரும் சுற்றுலாப்பயணி ஒருவருக்கு ரூ.250 டாலர் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
இங்கு புகையிலைப் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

சாலைகளில் சிக்னலே கிடையாது. ஆனால் இந்த குளிர் பூமியிலும் ஊழல், கிராமப்புற வறுமை, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின்மை, கிரிமினல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

இந்த சூழலில் , சனிக்கழமைதோறும் மருத்துவமனைக்கு வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பிரதமர் டிஷெரிங், ஞாயிற்றுக்கிழைமை குடும்பத்தினரோடு கழிக்கிறார்.