இமாச்சலில் மழை வெள்ளத்துக்கு 8 பேர் பலி

டில்லி:
இமாச்சல் மாநில வெள்ளத்துக்கு 8 பேர் பலியாகியுள்ளனர்.

இமாச்சல், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்கிறது. இமாச்சலில் 3 நாட்களாக பெய்யும் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 200 சாலைகளின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தினால் பள்ளி மாணவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் ஆங்காங்கே சிக்கியுள்ளனர். மீட்பு பணியில் விமானப்படை ஈடுபட்டுள்ளது. இமாச்சல் மழை, வெள்ளத்திற்கு இதுவரை 8 பேர் பலியாகியுள்ளனர்.

கனமழை மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட இமாச்சல பிரதேசத்திற்கு மத்திய அரசு உதவி செய்ய வேண்டும் என்று பா.ஜ.க எம்.பி. அனுராக் தாகூர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.

இதை தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்துக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரிலும் கனமழை பெய்து வருகிறது. பல மாநிலங்களில் மழை பெய்வதால் ராணுவம் தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.