இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82.29 லட்சத்தை தாண்டியது

டில்லி

ந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 82,29,332 ஆக உயர்ந்து 1,22,642 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

நேற்று இந்தியாவில் 45,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 82,29,322 ஆகி உள்ளது.  நேற்று 491 பேர் உயிர் இழந்து மொத்தம் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை 1,22,642 ஆகி உள்ளது.  நேற்று 53,312 பேர் குணமடைந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 75,42,905 ஆகி உள்ளது.  தற்போது 5,62,329 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,369 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 16,83,775 ஆகி உள்ளது  நேற்று 113 பேர் உயிர் இழந்து மொத்தம் 44,024 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,726 பேர் குணமடைந்து மொத்தம் 15,14,078  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,25,109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 3,014 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,23,412 ஆகி உள்ளது  இதில் நேற்று 24 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,192 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,053 பேர் குணமடைந்து மொத்தம் 7,65,261 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 50,592 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 2,618 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 8,25,966 ஆகி உள்ளது  இதில் நேற்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 6,706 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,509 பேர் குணமடைந்து மொத்தம் 7,95,592 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,668 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 2,504 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 7,27,026 ஆகி உள்ளது  இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 11,152 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 3,644 பேர் குணமடைந்து மொத்தம் 6,94,880 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,994 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நேற்று 1,969 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,83,882 ஆகி உள்ளது  இதில் நேற்று 26 பேர் உயிர் இழந்து மொத்தம் 7,051 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 2,388 பேர் குணமடைந்து மொத்தம் 4,53,458 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 23,323 பேர் சிகிச்சையில் உள்ளனர்.