இந்தியாவில் கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் பலி : தமிழகத்தில் மட்டும் 43

டில்லி

கில இந்திய அளவில் கொரோனாவுக்கு 175 மருத்துவர்கள் பலியாகி உள்ள நிலையில் அதிகபட்சமாகத் தமிழகத்தில் 43 பேர் உயிர் இழந்துள்ளனர்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா மரணம் அதிகரித்து வருகிறது.

நேற்று வரை இந்தியாவில் 38,971 பேர் உயிர் இழந்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் 15842 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

அகில இந்திய அளவில் 175 மருத்துவர்கள் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.

இதில் தமிழகத்தில் மட்டும் 43 மருத்துவர்கள் மரணம் அடைந்துள்ளனர்.

அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 23 மருத்துவர்களும் குஜராத்தில் 20 மருத்துவர்களும் உயிர் இழந்துள்ளனர்.

அரியானா, மேகாலயா, ஒரிசா, புதுச்சேரி,காஷ்மீர் ஆகிய இடங்களில் தலா ஒரு மருத்துவர் உயிர் இழந்துள்ளனர்.

கார்ட்டூன் கேலரி