Random image

இந்தியாவில் 2 நிமிடத்துக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழப்பு…ஐ.நா

டில்லி:

இந்தியாவில் 2 நிமிடங்களுக்கு தலா 3 குழந்தைகள் உயிரிழப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.

ஐ.நா.வின் குழந்தைகள் இறப்பு கணக்கீடு குழு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில்,‘‘ இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு 2 நிமிடங்களுக்கும் 3 குழந்தைகள் மரணம் அடைந்து வருகின்றனர். இதற்கு குடிநீர், துப்புரவு வசதி, முறையான ஊட்டச்சத்து அல்லது அடிப்படை சுகாதார வசதி ஆகியவை இல்லாததே காரணம்.

2017-ம் ஆண்டு இந்தியாவில் 8 லட்சத்து 2 ஆயிரம் குழந்தைகள் மரணம் அடைந்துள்ளன. இது கடந்த 5 ஆண்டுகளில் மிகக்குறைவு. எனினும் உலகளவில் குழந்தைகள் மரணத்தில் இந்தியா முதலிடத்தில் உள்ளது’’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டு இந்தியாவில் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை 8 லட்சத்து 67 ஆயிரமாக இருந்தது. தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட அரசின் பல்வேறு நடவடிக்கைகளே காரணமாக குழந்தைகள் இறப்பு சதவீதம் குறைந்து வருவதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.