புதுடெல்லி:

மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு தரும் அழைப்போ அல்லது எஸ்எம்எஸ் தகவலோ வருவதாக ட்ரூ காலர் தெரிவித்துள்ளது.


இந்தியாவிலேயே புதுடெல்லிதான் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற நகராக உள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக டெல்லியில் உள்ள 28% பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் தொடர்பான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் வருகின்றன.

உலகம் முழுவதும் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்படும் நிலையில், இந்தியாவில் தொடர்ந்து மூன்றில் ஒரு பெண்ணுக்கு பாலியன் துன்புறுத்தல் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ்-கள் வருகின்றன என்பதை கோடிட்டு காட்ட வேண்டியுள்ளது.

கடந்த ஆண்டில் இருந்த இந்த துன்புறுத்த நடப்பு ஆண்டில் குறையவில்லை. இந்தியாவில் 52% பெண்கள் வாரம் ஒருமுறை பாலியல் துன்புறுத்தல் அழைப்பையோ, எஸ்எம்எஸ் தகவலையோ பெறுகின்றனர்.

கடந்த ஆண்டில் 45% பெண்களுக்கு ஆபாச வீடியோ மற்றும் படங்கள் வந்தன. இந்த ஆண்டு 78 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதுபோன்ற துன்புறுத்தல்களில் 74% அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வருகிறது. 23% பெண்களை குறிவைத்து இயங்குபவர்களிடம் இருந்து வருகிறது.

11% துன்புறுத்தல்கள் தெரிந்தவர்களிடம் இருந்தே வருகின்றன. இந்த பிரச்சினையிலிருந்து பெண்களை விடுவிக்க, இட்ஸ் நாட்ஓகே என்ற பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.